நீர், மின் கட்டணத்திலும் பொதுமக்களுக்கு சுமை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி

0
216

எரிபொருள் விலை உயர்வினால் மின் உற்பத்திக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திலும் இடையிடையே ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சார கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டி வரும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறைந்தளவு நீர் பாவனை செய்யும் நுகர்வோருக்கு சுமை ஏற்படாத வகையில் அதிகளவு நீரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மாத்திரமே கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here