பூநகரி கௌதாரிமுனையில் உள்ள கணேசா ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொண்மை வாய்ந்த
கெளதாரி முனை கணேசா ஆலயம் தொல்லியல் திணைக்களத்தால் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் வரலாற்று தொண்மையான சான்றுகள் இருக்க கூடும் என்ற ரீதியிலேயே இந்த ஆய்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.
யாழ் பல்கலைக்கழக. வரலாற்றுத்துறை ஓய்வு நிலை பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தலைமையில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை நான்காம் வருட மாணவர்களே ஆலய வளாக பகுதிகளில் அகழ்வு ஆராச்சியில் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தொல்லியல் திணைக்களத்தினுடைய புனர்நிர்மாணங்களுக்கு பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் வரணி ஜெயத்திலக கலந்து கொண்டு குறித்த அகழ்வினை மேற்கொண்டு வருகின்றனர்.