பழம்பெரும் சிங்கள நடிகர் ரெக்ஸ் கொடிப்பிலி காலமானார்.
தனது 85 ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள வெள்ளித்திரையின் பொற்காலத்தை வடிவமைத்த மற்றொரு சிறந்த நடிகராக ரெக்ஸ் கொடிப்பிலியை அழைக்கலாம்.
சினிமாவில் வில்லன் வேடத்திற்கு அழியாத வடிவம் சேர்த்த ரெக்ஸ் கொடிப்பிலி, ஏறக்குறைய 150 படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.