Saturday, November 23, 2024

Latest Posts

வெளிநாட்டு மாப்பிளைகளிற்கு வந்தது ஆப்பு

வெளிநாட்டு பிரஜைகள் இலங்கை பிரஜைகளை திருமணம் செய்யும் நடவடிக்கைகளில் இறுக்கமான நடவடிக்கையை அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு பிரஜைகள் இது தொடர்பில்
வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றவர்களை திருமணம் செய்யும் ஓர் இலங்கைபிரஜை பதிவுத் திருமணம் செய்யவே இந்த புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 2022.01.01 முதல் வெளிநாட்டு பிரஜா உரிமை உடைய ஒருவர் தாம் வதியும் நாட்டிலிருந்து குற்றவாளி அல்ல என அந்நாட்டின பாதுகாப்புபிரிவிலிருந்து பெற்றுவந்த கடிதத்தை பத்தரமுல்லையிலிருக்கும் பதிவாளர்நாயகம் திணைக்களத்தில் சமர்ப்பித்து இலங்கை பதிவாளர் நாயகத்தின் அனுமதி பெறவேண்டும்.
(Security clearance Report)

இதேபோன்று சுகாதார நிலை பற்றிய ஓர் சுய பிரதிக்கினையும்
(Health Declaration) சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தாலும்
சாதாரண விவாக பதிவாளர்கள் மூலம் பதிவு செய்ய முடியாது. ( கிராம பதிவாளர்கள் ) .
பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் மூலமே பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர்களிற்கு இந்த விதிமுறை பொருத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.