2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை உள்ள காலப்பகுதியில், மொத்தமாக 22,58,202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகள் ஆகும். அவர்களின் எண்ணிக்கை 5,10,133 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிரித்தானியப் பிரஜைகள் 2,04,703 பேர், ஜெர்மன் பிரஜைகள் 1,41,941 பேர், மற்றும் சீனப் பிரஜைகள் 1,29,403 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் கணிசமான அளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, டிசம்பர் மாதத்தின் முதல் 21 நாட்களில் மட்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,54,609 பேர் எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
