இலங்கையில் கொவிட் தொற்றின் ஒமிக்ரோன் JN-1 திரிபு பரவுவதற்கான அபாயம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த அபாயத்தை மதிப்பிடுவதற்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்துடன் இணைந்து மரபணு சோதனைகளை நடத்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
செயல்திறன்மிக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கொ விட்-19 பரிசோதனை முயற்சிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் உள்ள பாரிய மருத்துவமனைகளில் கொவிட் பரிசோதனைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அண்மைய சோதனைகள் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்துள்ளன. குறிப்பாக குறைந்த எண்ணிக்கையிலான கொவிட்-19 தொற்றாளர்களே இலங்கையில் பதிவாகியுள்ளனர். மேலும் பெறப்பட்ட மாதிரிகள் புதிய திரிபுக்கு எதிராக உள்ளமையால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
என்றாலும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுவது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாச நோய்களின் பரவலைத் தடுக்க முகமூடி அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தூரத்தை பராமரித்தல் மற்றும் இருமல் மற்றும் தும்மல் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தலை செய்யுமாறு சுகாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.