களத்தில் இறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி

0
185

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டத் தொடரை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு பிரதான கூட்டமொன்றை நடாத்திய பின்னர் நாடு பூராகவும் கூட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.

கட்சியின் உயர்பீடக் குழு உள்ளிட்ட குழுக்களுக்கான பிரதிநிதிகள் அடுத்த மாதம் நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய அமைப்பாளர் மற்றும் வாக்களிப்பு முகவர் நியமனத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கி பண்டார ஜனாதிபதிக்கு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஆறு பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here