ஆனைக்கோட்டை இளைஞர் கௌதாரிமுனையில் மர்மமான முறையில் உயிரிழப்பு

0
254

ஆனைக்கோட்டை இளைஞர் கௌதாரிமுனையில் மர்மமான முறையில் உயிரிழப்பு.

பூநகரி கௌதாரி முனைக்கு யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டையில் இருந்து சென்ற இளகஞர்களில் ஒருவர் மர்மமான முறையில் இன்று உயிரிழந்துள்ளார். 

ஆனைக்கோட்டையில் இருந்து கௌதாரிமுனைக்கு பட்டா வாகனத்தில் சுற்றுலா சென்ற ஒருவருக்கு நெஞ்சில் ஏற்பட்ட காயத்திற்கு வைத்தியத்திற்காக பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவரின் மரணத்திற்கு குழுக்களிற்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக காயம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

குறித்த மரணம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here