பாடகர் மாணிக்கவிநாயகம் காலமானார்

0
215

பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் தனது 78 ஆவது அகவையில் நேற்று மாலை   இதய கோளாறு காரணமாக காலமானார்.


இதய கோளாறு காரணமாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு 
சிகிச்சை பெற்று வந்த மாணிக்க விநாயகம் வீட்டில் காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். 


திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும.  நடித்துள்ளார்.

பருத்தி வீரன், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மயிலாடுதுறை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகனாவார்.


இதேநேரம் ஈழத் தமிழர்களின் நெஞ்சம்கொண்ட பாடலான விடை கொடு எங்கள் நாடேகடல் வாசல் தெளிக்கும் வீடேபனை மர காடே, பறவைகள் கூடேமறுமுறை ஒரு முறை பார்போமா என்னும் பாடலைப் பாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here