துபாய் சுத்தா கைதிப்பின் பிணையில் விடுதலை!

0
192

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அதிகாரிகளால் இன்று (டிசம்பர் 28) கைது செய்யப்பட்ட ‘துபாய் சுத்தா’ என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரியதர்ஷன 100,000 ரூபாய் இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடுவெல நீதவான் சாமினி விஜேபண்டாரவின் உத்தரவின் பேரில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வேலை தேடுபவர்களை செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று காலை SLBFE அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

SLBFE சட்டத்தின் 37 வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here