உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Date:

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஸ்திரமான நிலையை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை குறிவைத்து ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்பு ஓரளவுக்கு தணிந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

ஆனால், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் கச்சா எண்ணெய் சந்தையை எதிர்மறையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பிபாய் விலை 79.75 டொலராகவும், டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் பிபாய் விலை 74.06 டொலராகவும் உள்ளது.

நேற்று (27) கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் குறைந்துள்ளது.

இதனால் ஜனவரி மாதம் இலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள விலை திருத்தத்தில் பாரிய அதிகரிப்புகள் எதவும் எரிபொருள் விலைகளில் இடம்பெறாதென அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...