ஓரிருவரின் தற்காலிக திருப்திக்காக ஐக்கிய தேசியக் கட்சியை பிணைக் கைதியாக வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிறகு பாராளுமன்றத்திலும் கட்சியிலும் மிக மூத்தவர் நான் என்பது அனைவருக்கும் தெரியும், அது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எவருக்கும் தெரியும். ஆனால் ஓரிரு மாற்றாந்தாய்களின் அக்கறையால் இந்தக் கட்சியை அழிக்க அனுமதிக்க முடியாது. சுமார் 200 பேர் இதிலிருந்து வெளியேறினாலும் கடைசியில் இந்த ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் கட்சி. இது பாதுகாக்கப்பட வேண்டும். ஒன்றிரண்டு பேரின் தற்காலிக திருப்திக்காக எங்கள் கட்சியை பணயக்கைதியாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது.
கேள்வி – யானை மீண்டும் வருமா?
“அனைவருடைய முயற்சியும் இந்த யானையுடன் ஒன்றுபடுவதுதான். ஐக்கிய தேசியக் கட்சி யாரையும் இழக்காத இவ்வேளையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஊடாக சந்தர்ப்பத்தை வழங்கிய ஐ.தே.க உறுப்பினர் நான் மட்டுமே. எனவே இன்று நான் நாட்டின் மூலை முடுக்கிலுள்ள ஒவ்வொரு ஐ.தே.க.வினருக்கும் கூறுகின்றேன், தயவுசெய்து வந்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள். நான் ஒருவனாக இருக்கலாம். ரணில் விக்கிரமசிங்க நாட்டின் கடனை அழித்து நாட்டை அபிவிருத்தி செய்தார், அதே வாய்ப்பை உருவாக்குவோம்”
கொழும்பில் நேற்று (டிசம்பர் 27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.