இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று (28) புதுடெல்லி சென்றுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட நாமல் ராஜபக்ஷ, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பல அரசியல்வாதிகளையும் சந்தித்துள்ளார்.