மினுவாங்கொட பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 25 T-56 தோட்டாக்களுடன் ஒரு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (27) நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
மேலும் அவர் மினுவாங்கொட, ஹீனடியன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் சம்பவம் குறித்து மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
