ஜா-எல நகர சபையின் தலைவரினால் சமர்பிக்கப்பட்ட எதிர்வரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தலைவர் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஐவர் மாத்திரம் வாக்களித்ததோடு எதிராக 10 பேர் வாக்களித்தனர்.
இதன்படி வரவு செலவுத் திட்டம் ஐந்து மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஜா-எல நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் (SLPP) உள்ளதுடன் ஐந்து பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இதற்கு மொட்டு கட்சி முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.