Saturday, July 27, 2024

Latest Posts

சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த இரு தீவிரவாதிகள் தமிழகத்தில் கைது!

இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரரின் (ஐஎஸ்) உறுப்பினரை, அக்டோபர் 23 ஆம் திகதி தமிழகாதில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேகத்தில் கைதுசெய்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அறிவித்துள்ளது.

நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி என்ற மற்றொரு நபரையும் என்ஐஏ கைது செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் 250 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரியான மௌலவி சஹ்ரான் பின் ஹாஷிமுடன் ஐஎஸ் உறுப்பினர் ஷேக் ஹிதாயத்துல்லா தொடர்பில் இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரும் தமிழகத்தில் கோவையில் கைது செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் 2022 பிப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் குற்றவியல் சதித்திட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது என NIA அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி உமர் ஃபாரூக் தலைமையில், இறந்த குற்றவாளி ஜமீஷா முபீன் (கோவை குண்டுவெடிப்பில் இறந்தார்), முகமது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகியோருடன் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதகவும் அங்கு அவர்கள் பயங்கரவாதச் செயல்களுக்குத் தயாராகவும் சதி திட்டங்கள் தீட்டியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தொடர்புகள் தொடர்பாக என்ஐஏ-வால் விசாரிக்கப்பட்ட ஜமீஷா முபீன், கோவை உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23-ஆம் திகதி காலை அவர் ஓட்டிச் சென்ற மாருதி 800 காரில் இருந்த எல்பிஜி சிலிண்டர் வெடித்துச் சிதறியதால் சந்தேகத்திற்கிடமான முறையில் கருகி உயிரிழந்தார்.

இறந்தவர் குண்டுவெடிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார். இந்த வழக்கில் மாநில காவல்துறை கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தை (யுஏபிஏ) செயல்படுத்தியது, பின்னர் அது என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்ட NIA அதிகாரிகளின் கூற்றுப்படி, 2017 முதல் ஐஎஸ் சித்தாந்தத்தைப் பிரச்சாரம் செய்து வரும் ஹிதாயத்துல்லா, அசாருதீனுடன் ஜூன் 2019 இல் கைது செய்யப்பட்டார். அவர் 2020 இல் பிணையில் விடுவிக்கப்பட்டார். உக்கடத்தைச் சேர்ந்த அசாருதீன் தற்போது கேரளா-தமிழ்நாடு ஐஎஸ் தொகுதியின் தலைவராவார். இவர் இலங்கை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர்.

252 பேர் கொல்லப்பட்ட இலங்கை குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாஷிம் என்பவரால் ஈர்க்கப்பட்டு, அந்த நேரத்தில் இரண்டு தென்னிந்திய மாநிலங்களில் இதேபோன்ற தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் NIA தெரிவித்துள்ளது.

2019 இல் ஹிதாயத்துல்லாவுக்கு எதிராக NIA இன் குற்றப்பத்திரிகையின் படி, இலங்கை குண்டுவெடிப்புகளுக்கு முன்னர், ஹிதாயத்துல்லா மற்றும் ஹாஷிம் ஆகியோர் பேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர்.

ஆதாரம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.