இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராகத் தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என்று கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவின் பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனை நியமித்துள்ளமையால் அவர் நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பார்.
எனினும், தமிழரசுக் கட்சியினுடைய ஊடகப் பேச்சாளராகத் தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார்.” – என்றார்.