உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட இந்நிலையிலேயே இன்று அதிகாலை அவர் தனது 100ஆவது வயதில் காலமானார்.
தாயின் மரணத்தை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது என தனது சோகத்தை பகிர்ந்துள்ளார்.
என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
N.S