மூன்று மாதங்களில் நாடு ஸ்திரமடைந்துள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

0
172

பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இடைநிறுத்தப்பட்ட பல வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் மூலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம் மீண்டும் திவாலாகி விடும் என எதிர்க்கட்சிகள் கூறினாலும், ஜனாதிபதியால், நிதியமைச்சு மற்றும் ஏனைய அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு தெளிவான தீர்மானங்களை எடுக்க முடிந்தது.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களிடையே நாட்டின் மீதான நம்பிக்கை வலுவடைந்துள்ளது.

பங்குச் சந்தையும் அண்மைகாலமாக கடுமையான வளர்ச்சியை கண்டுள்ளது. ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இலங்கை நகர்கிறது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here