ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கும் மக்களுக்கு மந்த போஷாக்கு – எதிர்க்கட்சித் தலைவர் கவலை

Date:

ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கும் மக்களுக்கு மந்த போஷாக்குமே உரித்தாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊட்டச்சத்தின்மை தலைவிரித்தாடிய நாடு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,குறைந்த எடை கொண்ட குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நாடு என்ற சாதனையை இலங்கை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் குறையை கேட்டறியும்’மனிதாபிமான சுற்றுலா’வின் நான்காம் நாள் விஜயத்தை இன்று(29) சூரியவெவ நகரில் ஆரம்பித்து நகர மக்கள் மற்றும் வியாபாரிகளைச் சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்ததுடன் “குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு” என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கி வைத்தார்.

இதேவேளை, சூரியவெவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான சுஹக பிரதீப் அவர்களின் சூரியவெவ ஐக்கிய இளைஞர் சக்தி அலுவலகத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த அரசாங்கம் மதவாதம், இனவாதம், பொய்களைக் கொண்டே வெற்றி பெற்றதாகவும்,ஒரு காட்போர்ட் தேசபக்தியை உருவாக்கி, சிங்கள பௌத்த சிந்தனைகள் கணக்கில் எடுக்கப்படாது, இனவாதத்தையும், மதவாதத்தையும், தீவிரவாதத்தையும், பொய்யையும் பரப்பியது இந்த அரசாங்கமே என்றும் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களில் அரசாங்கம் நம் நாட்டை கண்ணீரில் மூழ்கும் ஒர் சொர்க்கமாக மாற்றிவிட்டதாகவும்,மறுபுறம் இருண்ட சொர்க்கமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது மாத்திரமன்றி இன்று இந்த நாடு பஞ்சபூதமாகவும் தேசிய வள விற்பனை சொர்க்கமாகவும் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...

அரசியல் + பாதாள உலகம்! சிக்கும் முக்கிய புள்ளிகள்

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி...

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...