புதிய VAT திருத்தங்கள் காரணமாக எரிவாயு விலை நாளை (01) முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
இருப்பினும், துறைமுகம் மற்றும் விமான நிறுவனம் மூலம் எரிவாயுவுக்கு விதிக்கப்பட்ட 2.5% நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எரிவாயு விலையில் 15.5% VAT சேர்க்கப்பட உள்ளது.
புதிய VAT சதத்துடன் சேர்த்து 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், தற்போது 3565 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 4065 ரூபாவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.