வெலிகம பிரதேசத்தில் இன்று (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வெலிகம பெலானாவில் உள்ள ஹோட்டலுக்கு வந்த சிலர் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் செல்லும் போது பொலிஸார் வேனை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சண்டையில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.