பணவீக்கத்தில் மாற்றம்

Date:

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் 2024 டிசம்பர் மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்க வீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்கம் 2024 டிசம்பர் மாதத்தில் -1.7% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் இன்று (31) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2024 நவம்பர் மாதம் இது -2.1% ஆக பதிவாகி இருந்தது.

2024 டிசம்பரில், உணவு வகையின் வருடாந்திர பணவீக்கம் (புள்ளி) 0.8% ஆக அதிகரித்துள்ள நிலையில், 2024 நவம்பரில் இது 0.6% ஆகவும் பதிவாகியிருந்தது.

இதற்கிடையில், 2024 நவம்பரில் -3.3% ஆக குறைந்திருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் 2024 டிசம்பரில்-3.0% ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...