இன்று (31) அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, திலின கமகே மொரட்டுவ மாவட்ட நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இடமாற்றத்தின் பின்னர் தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.