பூநகரி பிரதேச சபையின் தவிசாளராக சிறீரஞ்சன் கடமையேற்றார்

0
239

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முழங்காவில் தேசிய பாடசாலையின் பிரதி அதிபருமான சிறீரஞ்சன் அவர்கள் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தவிசாளரை வரவேற்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புதிய தவிசாளரை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வரவேற்றனர் .
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உபதவிசாளர் கயன் பூநகரி பிரதேச சபையின் உபதவிசாளர் எமிலியாம்பிள்ளை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளையின் செயலாளர் விஜயன் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here