இந்த அரசாங்கத்தால் இனி நாட்டை நடத்த முடியாது எனவும், எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரமான அரசாங்கத்தை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கட்சி பேதங்களை மறந்து முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த தருணத்தில், நாட்டுக்கு எதிராக ஒரு கும்பலையோ அல்லது தனி நபரையோ பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களை பாதுகாப்பதில் தங்களை அர்ப்பணிக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டின் பிரச்சினைகளை 5 நாட்கள் 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இந்த நாட்டு மக்களை யாராவது ஏமாற்ற முற்பட்டால் அது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை எனவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற கூட்டத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டை கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், உடனே நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற பேச்சு பொய்யானது எனவும் தெரிவித்தார்.