எரிபொருள் நெருக்கடி காரணமாக கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று 500க்கும் குறைவான போக்குவரத்து வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகள் அடங்கிய கொள்கலன்களை கொண்டு செல்வதற்கு தினமும் 6,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன, இதன்படி இன்று 10% க்கும் குறைவான கொள்கலன் கார்களே இயக்கப்படுகின்றன.
அரசாங்கம் தமது வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதாக அறிவித்துள்ள போதிலும் அதற்கான வேலைத்திட்டம் எதுவும் இல்லை என கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படாவிட்டால், தற்போது இயங்கும் கொள்கலன் கார்களையும் சேவையில் இருந்து நீக்க வேண்டியிருக்கும் என்றும் சங்கம் கூறுகிறது.
கன்டெய்னர் வாகனங்கள் ஓடுவதை நிறுத்தினால், அது நேரடியாக நாட்டின் ஏற்றுமதி நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிக்கும்.