ரணில், டலஸ், அனுர போட்டி – நாளை வாக்கெடுப்பு

0
58

நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அலகபெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொமியப்பட்டுள்ளன.

ஆளும் கட்சி சபை முதல்வர் தினேஷ் குணவர்தன ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரை முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அதனை வழி மொழிந்தார்.

டலஸ் அழகபெரும அவரது பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன் வெளிவகார அமைச்சர் ஜி.எல் பிரிஸ் அதனை வழிமொழிந்தார்.

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அதனை வழிமொழிந்தார்.

அதன்படி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே நாளைய தினம் ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here