சொகுசு ஹோட்டல்களில் விறகு.. அதிகரிக்கும் கேஸ் திருட்டு

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பாடு காரணமாக பிரதான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விறகு அடுப்பு பயன்படுத்தப்படுகிறது.

கொழும்பு கோல் ஃபேஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட மேலும் சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு தயாரிப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

நாட்டில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாளாந்தம் மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

இந்நிலையில் இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என கேஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கேஸ் தட்டுப்பாட்டை அடிப்படையாக வைத்து பல்வேறு பகுதிகளில் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் கேஸ் களவாடப் பட்டுள்ளன சில பகுதிகளில் கேஸ் கொண்டு செல்லும் வாகனத்தின் சாரதி தாக்கப்பட்டு கேஸ் பலாத்காரமாக பறித்துச் செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அமைதியான போராட்டம்

கொழும்பு LNW: ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரும் சர்வதேச காணாமல்...

சிகிச்சை முடிந்து வெளியேறிய ரணில்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்...

சஷீந்திரவுக்கு பிணை மறுப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக...

ராஜித அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில்

நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாகி இருந்த முன்னாள் மீன்பிடி...