முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் வீழ்ச்சி நிலைக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த போதே பிரதம நீதியரசர் ஐவர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான உண்மைகளை ஆராய வேண்டாம் எனவும், ஜனாதிபதியின் தடையின் கீழ் மனு விசாரணையில் இருந்து அவரை முழுமையாக விடுவிக்குமாறும் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.