புதிய அரசியல் கூட்டணி தயார்!

Date:

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக் கட்சிகள் இணைந்து புதியதோர் அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ளனர்.

இந்த  கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

கூட்டணியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் 21 ஆம் திகதி  அறிவிக்கப்படும் எனவும்,  விமல் வீரவன்ச எம்.பி தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார எம்.பி தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்மன்பில எம்.பி தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய, இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, யுதுகம அமைப்பு, எமது மக்கள் சக்தி உட்பட மேலும் சில கட்சிகளும், தேசியவாத அமைப்புகளும் கூட்டணியில் ஒன்றினையும் எனவும் அவர் தெரிவித்தார். 

தற்போதைய ஜனாதிபதி ரணில் தலைமையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது எனவும், நாட்டின் அடுத்தக்கட்ட அரசியல் செயற்பாடுகளை தீர்மானிக்கும் விதமான முடிவுகள் இப்போதே எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கும் அவர், மாற்று அரசியல் சக்தியாக தாம் உருவாவதாகவும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...

செம்மணி – சர்வதேச விசாரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக...

செம்மணியில் இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதி மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன்,...