இடம்பெற்ற எரிபொருள் கடத்தலில் அரச அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
“சமீபத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் மீது மட்டுமே எரிபொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அது முற்றிலும் தவறு. இவர்கள் மட்டுமன்றி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திரண்டிருந்த அரச அதிகாரிகளும் அந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதை தற்போது நாம் காணமுடிகிறது. முச்சக்கர வண்டிகள் மட்டுமன்றி அரச அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா இதனைத் தெரிவித்தார்