யாழ். – கொழும்பு ரயில் சேவை அதிகரிப்பு

0
246

எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு, கோட்டைக்கான சரக்கு ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள அமைச்சர் ‘யாழ்.ராணி’ தொடருந்து மூலம் காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சென்றடைந்தார்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாண மக்களை கருத்தில் கொண்டு அதிகளவான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

காங்கேசன்துறை – கிளிநொச்சி அறிவியல் நகருக்கு இடையிலான ‘யாழ் ராணி’ ரயில் சேவை, தடைப்பட்டிருந்த இரவு அஞ்சல் ரயில் சேவை, உத்தரதேவி மற்றும் கடுகதி சேவைகளின் தரிப்பிட நிலையங்கள் அதிகரிக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here