அதன்படி அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின் படி, தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் அரச ஊழியர்களில் ஆரம்ப நிலை ஊழியர்கள் 100 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை ஊழியர்கள் 200 அமெரிக்க டொலர்களும், மூன்றாம் நிலை ஊழியர்கள் 300 அமெரிக்க டொலர்களும், உயர் மட்ட அதிகாரிகள் 500 அமெரிக்க டொலர்களும் மாதந்தம் இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.