நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய பயணம் பிற்போடப்படலாம் என தகவல் வௌியாகியுள்ளது. நிதி அமைச்சர் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்நிலையில் மல்வானையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பிலான வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராக வருகை தந்திருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் ஊடகவியலாளர்கள் இந்திய பயணம் குறித்து கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் COVID தொற்று அதிகரித்திருப்பதால், தற்போது அங்கு செல்ல முடியாது என பசில் ராஜபக்ஸ பதில் அளித்தார்.