பதுளை ஹிகுருகமுவ கலனல்பில் தோட்ட கிராமத்தில் வீடொன்றில் வசித்து வந்த தாயும் மகளும் உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத குழுவினரால் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் வசித்த தாய் எச்.எம்.ரன்மாணிகா (80) மற்றும் திருமணமாகாத மகள் ஆர்.எம்.ஜெயவதி (55) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வீட்டின் மற்றொரு அறையில் இருந்ததாக கூறப்படும் மற்றொரு மகள் ஆர்.எம்.மிசினோனா (60) வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர். இதனால் பலத்த காயங்களுக்குள்ளான அவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட 80 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயான இவர், கலெனல்பில் தேயிலை தோட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து தனது மகள்களுடன் வீட்டில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.