பிணையில் விடுதலையான லஹிரு வைத்தியசாலையில் அனுமதி

Date:

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று (09) கைது செய்யப்பட்ட போராட்ட செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவிற்கு இன்று (10) பிணை வழங்கப்பட்டுள்ளது.

2 இலட்சம் ரூபா தனிநபர் பிணையில் அவரை விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட “வெனசக தருணிய” அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர இன்று (10) காலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று (09) பிற்பகல் காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

குறித்த நிகழ்வின் பின்னர் லஹிரு வீரசேகர கொள்ளுப்பிட்டியில் வைத்து மருதானை பொலிஸ் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.

ஒகஸ்ட் 30ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட லஹிரு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...

அஹுங்கல்லையில் 74 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரை...

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...