ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரித்தானியாவின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் இடம்பெறுகிறது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு விஜயம் செய்துள்ள அரச தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வளமான தேசமாக மாறுவதற்கு நாம் ஒன்றிணைந்து வங்குரோத்து நிலைக்கு எதிராக போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் அலுவலகத் திட்டம் உட்பட இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.