பகல் உணவாக வெறும் தேங்காய் சாப்பிடும் அளவிற்கு பாடசாலை மாணவர்கள்

0
214

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், மாணவ தலைவியொருவர், பகலுணவாக தேங்காய் துண்டுகளைக் கொண்டுவந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தரம்-9 இல் கல்விப்பயிலும் அந்த மாணவி, கற்பதில் கெட்டிக்காரி மாணவ தலைவியாகவும் பணியாற்றுகின்றார்.

நிரந்த தொழில் இல்லாத அவருடைய தந்தை பிரதேசத்தில் கூலி வேலைச்செய்து வருகின்றார்.

அவருடைய தாய், வீட்டு வேலைகளைச் செய்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கின்றார். அந்த மாணவிக்கு மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகளும் உள்ளனர்.

பாடசாலையின் இடைவேளையில் ஏனைய மாண, மாணவிகளுடன் சென்ற இந்த மாணவ தலைவி, பகலுணவை சாப்பிடும் போதே, விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.இந்த சம்பவம், ஆசிரியர்களின் காதுகளுக்கு எட்டியது.

அதன்பின்னர் ஆசிரியர்கள் உணவுப் பொதிகளை கொண்டு வந்து அந்த மாணவிக்கு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், அதே பாடசாலையில் தரம் மூன்றில் கல்விப்பயிலும் மாணவர்கள் சிலரும் பகலுணவு இன்றி இருக்கின்றனர். அத்துடன், அந்த பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவர்களில் பலர் முதல்நாள் இரவு உணவை உட்கொண்டிருக்க வில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here