பதுளை நகரில் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை தலைக்கவசத்தால் தாக்குவதற்கு நபர் ஒருவர் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 19ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் பதுளை பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள கடையொன்றுக்கு அருகில் தனது ஜீப்பில் வந்திருந்த நிலையில், அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சரை தலைக்கவசத்தால் ஒருவர் தாக்க முற்பட்டதாகவும், அமைச்சரின் பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, தாக்க முயன்ற ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மற்றைய நபரை பொலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் அமைச்சருக்கு காயம் ஏற்படவில்லை.