கோதுமை மா விலை குறைய வாய்ப்பு

0
128

தருவிப்பு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதால் அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறையும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தருவிக்கப்பட்ட கோதுமை மாவின் சரக்குகள் கடந்த வாரம் முதல் நாட்டிற்கு வந்துள்ளன.

கடந்த மாதங்களில் இரண்டு பிரதான கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களுக்கு தருவிப்பு செய்யாமையினால், நாட்டில் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், இதன் காரணமாக ஒரு கிலோகிராம் விலை 350 – 400 ரூபா வரை அதிகரித்தது.

எவ்வாறாயினும், கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு இறக்குமதியாளர்கள் கோதுமை மாவை தருவிப்பு செய்து கையிருப்பு பெறுவதால் கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவிற்கும் குறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வார இறுதிக்குள் பெரிய தருவிப்புகள் நாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here