ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று (27) டோக்கியோவில் சந்தித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.
சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இதனை வரவேற்ற பிரதமர் லீ சியென் லூங் , இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
அடுத்த வருடம் இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிங்கப்பூர் பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.