ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 1.2% குறைவாக விநியோகம் செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மூன்று பம்ப்களுக்கு முத்திரையிட வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, ஒவ்வொரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலில் இருந்தும் நுகர்வோர் 5.40 ரூபாவை இழந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் எடை அளவீடுகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இது தொடர்பான சுற்றிவளைப்பு மற்றும் சோதனையில் இணைந்திருந்தனர்.