வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு எரிபொருள் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (05) முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கோட்டா முறையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய சுற்றுலா நடவடிக்கைகளை தடையின்றி இலகுவாக மேற்கொள்ளும் வகையில் இந்த விசேட வேலைத்திட்டம் எரிசக்தி அமைச்சுடன் இணைந்து தயாரிக்கப்பட்டதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.