நாட்டை அழிப்பது யார்? சஜித் வெளியிட்டுள்ள தகவல்

Date:

இந்த முட்டாள்தனமான அரசாங்கம் நாட்டை அழித்து வருவதாகவும், தேர்தலொன்று இல்லாமல் முன்னேற்றமொன்று இல்லை எனவும், அரசாங்கம் தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காக போராடுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அன்று வரிசையில் நின்று மக்கள் செத்து மடியும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,உரமின்றி விவசாயிகள் பெருமூச்சு விடும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து உயிர் இழந்தது போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, இன்று புலம்பிய வன்னம் கதறி அழுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சனத் பண்டார அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பெரும்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அமைதியான போராட்டங்களைக் கண்டும் அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், காலி முகத்திடல் வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நேற்றைய தினம் அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டதும் இதன் பிரகாரமே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தாயும் மகனும் கைகோர்த்து நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டத்தை கூட அரசாங்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மகனிடமிருந்து தாயை பறித்துச் சென்று ஜீப்பில் ஏற்றிச் செல்லும் காட்சிகளைக் கூட பார்க்கக்கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அமைதியான போராட்டங்களில் ஈடுபடும், ஜனநாயக சுதந்திரத்தை அனுபவிப்பவர்களுக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரச பயங்கரவாதத்துக்கும் அரச வன்முறைக்கும் நீண்ட கால ஆயுள் இல்லை என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், இதற்கு வரலாற்றில் பல படிப்பினைகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.இந்த அரசாங்கம் தேர்தலுக்கு முற்றாக அஞ்சுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தேர்தலை பிற்போடவே முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

உடனடியாக தேர்தலொன்றை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், முடிந்தால் ஜனாதிபதி தேர்தலையும் நடத்துங்கள் எனவும் சவால் விடுத்தார்.

தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு சூழ்ச்சிகளை பயன்படுத்துவதை விடுத்து, முடிந்தால் மொட்டு விரும்பும் எந்தத்தேர்தலையும் நடத்துங்கள் என்றும் சவால் விடுத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...