பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வர்த்தக பெண் திலினி பிரியமாலி இன்று சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
அது அவரிடம் இருந்த கைத்தொலைபேசியைக் கண்டெடுத்த சம்பவம் தொடர்பானது.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவிக்கையில், தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தாம் குற்றவாளி அல்ல என திலினி அறிவித்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி வரை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி ஒத்திவைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.