மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் மரணமான இளைஞர்!

0
167

இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் விழுந்து 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹசித லக்மால் விக்ரமசிங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இவர் பாணந்துறை கைத்தொழில் பகுதியில் உள்ள தங்கும் அறை ஒன்றில் தற்காலிகமாக வசித்து வந்தவர் எனவும் பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பகமூன சியம்பலாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பாணந்துறை, நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாணந்துறை குற்றப் புலனாய்வு சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here