திலினியின் மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளித்த ஜானகி சிறிவர்த்தன

Date:

226 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தற்போது வெலிக்கடை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டாவது இடப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கொழும்பு கோட்டை கிரிஷ் கட்டிடத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர், சுமார் 05 மணித்தியால விசாரணையின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

கிரிஷ் இயக்குனர் ஜானகி சிறிவர்தனவும் அந்த இடத்திற்கு அழைக்கப்பட்டு அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 12ஆம் திகதி, சந்தேகநபரான திலினி பிரியமாலி, கொழும்பு உலக வர்த்தக நிலையத்திலுள்ள தனது வர்த்தக நிலையத்திற்கு, இடப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட திலின பிரியமாலி, கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை நிலவரம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அமைதியான போராட்டம்

கொழும்பு LNW: ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரும் சர்வதேச காணாமல்...

சிகிச்சை முடிந்து வெளியேறிய ரணில்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்...

சஷீந்திரவுக்கு பிணை மறுப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக...