ஜனாதிபதி ரணிலின் விடாபிடி முடிவால் பின்வாங்கியது மொட்டுக் கட்சி!

Date:

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் கீழ் கடந்த அமைச்சரவை தற்காலிக அடிப்படையில் சிறிய மாற்றங்களுடன் மீண்டும் நியமிக்கப்பட்டது.

நிரந்தர அமைச்சரவையை நியமிப்பதற்கு பல தடவைகள் திகதிகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

குறிப்பாக மொட்டுவினால் வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியிடம் பல தடவைகள் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இதன்படி ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு மொட்டு தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காலநிலை மாற்றம் தொடர்பான உலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்துக்கு செல்லவுள்ளதாகவும், விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை...

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...