வரவு செலவுத் திட்டம் 2023 : இன்று இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு!

0
163

2023ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பாராளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று (நவம்பர் 21) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில், நீண்ட கால நிலையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் நோக்கில், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதன்படி, இன்று (நவம்பர் 22) மாலை 5.00 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு நிலை மீதான விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகும். டிசம்பர் 08ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது அதற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியும் வாக்களிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) பொதுச் செயலாளர் டில்வின் ஸ்லிவா தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தர லங்கா கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here